தாராபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

தாராபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டுகள் பழமையான வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரின் மையப் பகுதியான சின்னக் கடை வீதியில் நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழாவானது கடந்த 22 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் பிரமாண்டமாக துவங்கியது. தொடர்ந்து விசேஷ பூஜைகள் அந்தரயாகம், வேதிகார்ச்சனை, மூல மந்திரம், ஹோமம், திரவி ஆகுதி, பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இதில், 64 வகையான மூலிகை திரவியங்கள் 12 புண்ணிய நதிகளின் மகா தீர்த்தங்கள், கலசங்களில் எடுத்து வரப்பட்டு மருதுரை பட்டீஸ்வர ஸ்வாமி ஆலய அர்ச்சகர் மந்த்ராச்சல சிவாச்சாரியார் தலைமையிலான 12 சிவாச்சாரியார்கள் அடங்கிய குழுவினர் யாகசாலை பூஜைகளை நடத்தினர்.

தொடர்ந்து இன்றைய தினம், ஜகத்குரு சிருங்கேரி சாரதா பீடம் பாரதி தீர்த்த சுவாமிகளின் நல்லாசியுடன் தமிழ்நாடு ஆரிய வைசிய மகா சபையின் கௌரவ தலைவர் ராஜா ராமலிங்கம், தலைவர் சுப்பிரமணி, பெடரேஷன் தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.



இதன்படி, காலை 9:00 மணிக்கு புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் மற்றும் அம்மன் சன்னதி கோபுரம் உள்ளித்தவைகளுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனை பயபக்தியுடன் வணங்கி வந்தால் தடைபட்ட திருமண காரியங்கள், மனதுக்குப் பிடித்த வரன்கள், குடும்ப ஆரோக்கியம், கல்வி, தொழில், விவசாயம் உள்ளிட்டவைகளில் அபரிமிதமான முன்னேற்றம் ஆகியவை நிச்சயம் நடைபெறும் என்பது ஆண்டாண்டு கால நம்பிக்கையாக இருந்து வருகிறது.



சிறப்புமிக்க இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் அரசியல் ஆன்மீகம் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...