பொள்ளாச்சி அருகே ராஜகம்பள சமூக கோவில் நிலங்களை ஏலம் விட எதிர்ப்பு - அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகை!

பொள்ளாச்சி அடுத்த கூளநாயக்கன்பட்டியில் ராஜகம்பள சமூகத்தினர் நிர்வகிக்கும் கோவில் நிலங்களை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சி அருகே ராஜகம்பள சமூகத்தினரின் கோவில் நிலங்களை ஏலம்விட எதிர்ப்பு தெரிவித்து அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள கூளநாய்க்கன்பட்டி கிராமத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த உம்மைய்ய ஒல்சாமி, ஜக்கம்மாள் முத்துக்குமார சாமி கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலை பாரம்பரியமாக ராஜகம்பள சமூகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிர்வகித்து வருகின்றனர். மேலும் கோயிலுக்கு சொந்தமான 65 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை பெற்று வருவதோடு கோவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஏலத்தில் விடுவதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ கம்பள சமூகத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மக்கள் இன்று பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் இந்து அறநிலைய துறை செயல் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தின் போது, கோயில் நிலங்களை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது,

250 ஆண்டுகளாக கோவிலை ராஜகம்பள சமூக மக்கள் பராமரித்து விவசாயம் செய்து அதில் வரும் வருவாயை வைத்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தொழிலதிபர்களுடன் இந்து அறநிலையதுறை அதிகாரிகள் உடன்பாடு வைத்துக் கொண்டு கோயில் நிலத்தை ஏலம் விட முடிவு செய்துள்ளனர்.

எனவே காலங்காலமாக பராமரித்து வரும் தங்களுக்கு அனுபவ பாத்திய அடிப்படையில் இங்குள்ள மக்கள் நிர்வகிக்க அனுமதி வழங்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் ஏலம் விடக்கூடாது. ஏலம் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...