உதகை அருகே சிறுமி பலாத்காரம் செய்து கொலை - குற்றவாளியை தேடும் தனிப்படை

உதகை அருகே 14 வயது தோடர் பழங்குடியின மாணவியை வீட்டில் விடுவதாக கூறி காரில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யபட்ட வழக்கில் குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


நீலகிரி: உதகை அருகே சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பகல்கோடு மந்து பகுதியில் வசிப்பவர் குட்டன். இவர் தோடர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவரது 14 வயது மகள் உதகை அருகே HPG பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார்.

அவர் நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு செல்ல வழக்கம் போல் H.P.F பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள ரஜ்னேஷ் குட்டன்(25) என்ற தோடர் பழங்குடியின இளைஞர் காரில் வந்துள்ளார்.

மது போதையிலிருந்த அவர், தான் வீட்டிற்கு செல்வதாகக் கூறிய மாணவியை வீட்டில் விட்டுவிடுவதாக கூறியதையடுத்து சிறுமியும் காரில் ஏறிச்சென்றுள்ளார். மாணவி காரில் ஏற்றி கொண்ட ரஜ்னேஷ் குட்டன், பைக்காரா சாலையில் உள்ள அங்கர் போர்ட் என்ற இடத்தில் உள்ள வனப்பகுதிக்குள் அவரை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டுக்கு வராததால் சிறுமியின் தாயாரும், குடும்பத்தினரும் மாணவியை தேடி உள்ளனர். அப்போது வனப்பகுதியிலிருந்து காரில் வேகமாக வந்த ரஜ்னேஷ் குட்டனை பழங்குடியின இளைஞர்கள் நிறுத்தி கேட்ட போது முன்னுக்குப் பின் முரனான பதிலை கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.



சந்தேகமடைந்த அவர்கள் அப்பகுதியில் தேடும் போது சிறுமியின் புத்தகப் பையை முதலில் கண்டனர். பின்பு வனப்பகுதியில் தேடிப் பார்க்கும் போது புதர் பகுதியில் சிறுமி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமி இறந்ததை உறுதி செய்து உடலை பிரேதப் பரிசோதனைக்கு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வழக்கு பதிவு செய்துள்ள பைக்காரா காவல்துறையினர் ரஜ்னேஷ் குட்டன் மீது வழக்கு பதிவு செய்து அவர் மட்டும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தாரா? அல்லது கூட்டு பாலியல் சம்பவம் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக தலைமறைவாக உள்ள ரஜ்னேஷ் குட்டனை போலீசார் 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அந்த தனிப்படையினர் வனப்பகுதியிலும் அருகில் உள்ள கிராமங்களிலும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...