உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சி தலைவர் மீது முறைகேடு எதிரொலி - வட்டாட்சியர் விசாரணை!

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று வட்டாட்சியர் கண்மணி தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீது முறைகேடு எதிரொலியாக வட்டாச்சியர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற ஆய்வின் முடிவில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது உண்மை என அந்த குழு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஊராட்சி செயலர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் நிதியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கருதி ஊராட்சி மன்ற தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கு ஊராட்சிமன்ற தலைவர் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் ஏற்க தகுந்ததாக இல்லாததால் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 12ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் ஊராட்சி மன்ற தலைவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கருத்து கேட்பு கூட்டம் உடுமலை தாசில்தார் கண்மணி தலைமையில் நடைபெற்றது. அப்போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 12 பேர் தனித்தனியாக எழுத்துப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக ஊராட்சி மன்ற தலைவரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக ஊராட்சிமன்ற தலைவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? அல்லது தொடர்வாரா? என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...