குடிமங்கலம் பகுதியில் தென்னை சாகுபடியில் பூச்சி தாக்குதல் - வேளாண் அதிகாரிகள் ஆய்வு!

உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் வட்டாரத்தில் மொத்த சாகுபடி பரப்பான சுமார் 52 ஆயிரம் ஏக்கரில் கிட்டத்தட்ட 34 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தென்னை மட்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.


திருப்பூர்: குடிமங்கலம் பகுதியில் தென்னை சாகுபடியில் பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் வட்டாரத்தில் மொத்த சாகுபடி பரப்பான சுமார் 52 ஆயிரம் ஏக்கரில் கிட்டத்தட்ட 34 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தென்னை மட்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் புதிய தென்னை மரங்கள் நடவு செய்யப்பட்டு சாகுபடி பரப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.



இந்தநிலையில் தென்னை மரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வேளாண் அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். சென்னை வேளாண்மை துணை இயக்குனர் (பயிர் பாதுகாப்பு) சண்முகசுந்தரம், திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன்,

தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ் ராஜா, விஞ்ஞானிகள்-வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, கலையரசன், குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

குடிமங்கலம் வட்டாரத்தில் இலுப்ப நகரம் கிராமத்தில் தென்னந்தோப்புகளில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கள ஆய்வின் போது தென்னை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, தென்னை குருத்தழுகல், காண்டாமிருக வண்டு தாக்குதல் மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு குறித்து கண்டறிந்தனர். மேலும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...