உடுமலை உழவர் சந்தை முன்பு தேங்கிய மழைநீர் - பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி!

உடுமலை அருகேயுள்ள கபூர் கான் வீதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை முன்பு மழை நீர் தேங்கியுள்ள நிலையில், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் மண்ணை கொட்டி மூட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே கபூர் கான் வீதியில் உள்ள உழவர் சந்தைக்கு முன்பு தேங்கியுள்ள மழை நீரால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

உடுமலையின் பிரதான சாலைகளில் ஒன்றான கபூர்கான் வீதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதாலும் குறைந்த விலையில் புத்துணர்வான காய்கறிகள் கிடைக்கும் என்பதாலும் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த சாலை சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்வதற்கும் உதவிகரமாக உள்ளது.

ஆனால் போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு முறையாக ஏற்படுத்தவில்லை. இதனால் மழை பெய்யும் போது சாலையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.



அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை பெய்த பலத்த மழையால் சாலையில் பாதி அளவிற்கு தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வந்த விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதே போன்று நேதாஜி விளையாட்டு மைதானத்திலும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் நிர் தேங்கியுள்ள தாழ்வான பகுதியில் மண்ணை கொட்டி சீரமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

தேங்கியுள்ள தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற முடியாமலும் பொதுமக்கள் நடை பயிற்சியை தொடர்வதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே கபூர்கான் சாலையில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கும், நேதாஜி விளையாட்டு மைதானத்தின் தாழ்வான பகுதியில் மண்ணைக்கொட்டி சீரமைப்பதற்கும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...