கோவையில் தந்தையை அடித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் குடும்ப தகராறில்  தந்தையை அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.


கோவை: கோவையில் தந்தையை கொன்ற வாலிபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மகன் குமரவேல் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன் குமரவேலை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கிருஷ்ணனுக்கு குமரவேல் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் குமரவேல் அவரது தந்தை கிருஷ்ணனை கட்டையால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து போலீசார் குமரவேலை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் குமரவேலுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சசிரேகா உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...