சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு 20 ஆண்டு சிறை - கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தோட்ட தொழிலாளியின் 5 வயது மகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்த கார்த்திக், அதற்கு உடந்தையாக இருந்த முருகேசன் ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


கோவை: கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் (வயது24). இவரது நண்பர் பாலக்காடு சித்தூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது38).

இவர்கள் இருவரும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுடன் சில தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். அதில் ஒரு தொழிலாளிக்கு 5 வயது குழந்தை உள்ளது.

கடந்த 14.10.2019 அன்று 5 வயது சிறுமி வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் மற்றும் முருகேசன் அந்த சிறுமியை தங்களுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.

பின்னர், அவர்கள் அந்த சிறுமியை அங்குள்ள ஒரு தென்னந்தோப்பிற்கு கொண்டு சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதற்கு முருகேசன் உடந்தையாக இருந்துள்ளார்.

அப்போது சிறுமி பயத்தினால் அலறினார். இதனால் அவர்கள் இருவரும் சிறுமியை வீட்டில் கொண்டு போய்விட்டனர். வீட்டில் அந்த சிறுமி தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். இதனால் சிறுமியின் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி அழுது கொண்ட தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து கூறினார்.

மேலும், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக், முருகேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார்த்திக், அதற்கு உடந்தையாக இருந்த முருகேசன் ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...