கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் - கோவையில் 3 பேர் கைது!

கோவை வீரப்பனூர் அருகே இரு சக்கர வாகனம் மூலம் கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற மணிகண்டன், வெங்கடாஜலபதி, பிரஜோஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்த சுமார் ஒரு டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் பொதுவிநியோக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோவை - கேரளா எல்லையான வாளையார், மீனாட்சிபுரம், பொள்ளாச்சி, வேலந்தாவளம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை கிணத்துக்கடவு ஓலப்பதி சாலை வீரப்பகவுண்டனூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதேபகுதியில் தலா 75 கிலோ எடை கொண்ட 14 மூட்டைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது35), மற்றும் ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலபதி (வயது41) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் கோவையில் பல்வேறு பகுதிகளில் மலிவான விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பிரஜோஸ் என்பவருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துவந்துள்ளனர்.

இதையடுத்து மணிகண்டன், வெங்கடாஜலபதி, பிரஜோஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்த சுமார் ஒரு டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...