சிறுத்தை தாக்கி காயமடைந்த வடமாநிலத் தொழிலாளர் - அமைச்சர் மதிவேந்தன் ரூ.10 ஆயிரம் நிதியுதவி!

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் வடமாநிலத்தைச் சேர்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவருக்கு அரசின் சார்பில் 10,000 ரூபாய் நிவாரண உதவியும் வழங்கினார்.



கோவை: சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வரும் வடமாநில தொழிலாளியை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் சிறுகுன்றா என்ற தனியார் எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து வரும் அணில் ஓராண் என்ற வடமாநிலத் தொழிலாளியை இரு தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று தாக்கியது. இதனை அடுத்து, அவருக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் அவரை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கோவை அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், 10 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையினை வழங்கி அணில் ஓரானின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்து பேசினார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:

தொழிலாளி அணில் ஓராணை சிறுத்தை தாக்கியதில் கால் முறிவு ஏற்பட்டது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி 4000 ரூபாய் முன்பு தரப்பட்ட நிலையில் தற்பொழுது மேலும் 10,000 நிவாரணத் தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுத்தையை பிடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக வேட்டை தடுப்பு காவலர்களையும் வன அதிகாரிகள் தலைமையில் 12 பேர் கொண்ட தனி குழு ஒன்றை அமைத்துள்ளோம்.

வனப் பகுதிகளிலிருந்து வனவிலங்குகள் ஊருக்குள் வராத வண்ணம் வனத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி வனவிலங்குகள் ஊருக்குள் வந்து கால்நடைகளையோ, செல்ல பிராணிகளையோ ஏதேனும் செய்தால் அதற்கான நிவாரணங்கள் வழங்கப்படும். காட்டு யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் பாதுகாப்பதற்கு மின்வேலிகள், செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஆகியவற்றை யானைகளுக்கு பாதிப்பு வராத வகையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

வனப்பகுதியில் வனத்துறையை மீறி தனியார் ரிசார்ட்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோடைகாலத்தை முன்னிட்டு வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருப்பதற்காக வனத்திற்குள்ளேயே அதற்கான குடிநீர் ஆதாரங்கள் மற்றும் உணவு ஆதாரங்களை வைத்து வருகிறோம்.

வனவிலங்குகளால் மனிதர்களுக்கோ அல்லது மனிதர்களின் இருப்பிடங்களுக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு 10 கோடி ரூபாயை முதலமைச்சர் வருடம் தோறும் ஒதுக்கியுள்ளார். அதிகப்படியான யானைகள் இறப்பதாக தெரிகிறது. யானைகள் வயது மூப்பின் காரணமாகவோ அல்லது ஏதேனும் பள்ளத்திலோ, கீழே விழுந்தாலோ அந்த அதிர்ச்சியின் காரணமாகக்கூட சில யானைகள் உயிரிழக்கக்கூடும்

அதேசமயம், யானைகளை நம்மால் எவ்வளவு காப்பாற்ற முடியுமோ அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். யானைகளின் வலசை பாதைகள் எங்கெங்கு உள்ளது என கண்டறிந்து வருகிறோம்.

இவ்வாறு, அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...