தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தடையா..? - அமைச்சர் மதிவேந்தன் பதில்

தென்காசி முண்டத்துறை புலிகள் சரணாலயத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்படிப்பு நடந்து வருகிறது. இங்கு படப்பிடிப்பு உரிய அனுமதி பெறாமலும், வனப்பகுதியில் வெடிகுண்டு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் கேட்டபோது, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.



கோவை: கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தளத்தில் வனத்துறை விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

கோவை வந்த அமைச்சர் மதிவேந்தனிடம், தென்காசி முண்டத்துறை புலிகள் சரணாலயத்தில் அரசு அனுமதி இல்லாமல் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர். அதற்கு அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:

எப்போதும் வனப்பகுதியில் சூட்டிங் எடுக்கும்போது அனுமதி கேட்பார்கள். அந்த அனுமதி மாவட்ட வனத்துறை அலுவலர், நேரடியாக சென்று அதை ஆய்வு செய்துதான் அனுமதி கொடுப்போம்.

எந்த நேரத்தில் எந்த தேதியில் எடுக்கிறோம், காலையிலிருந்து மாலை வரை எந்த நேரத்தில் எந்த இடத்தில் எடுக்கிறோம் என்பதை கேட்டு அதை ஆய்வு செய்துதான் அனுமதி வழங்குவோம். சூட்டிங் நடத்த அனுமதி இல்லை என்ற குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்.



வெடிகுண்டு வெடிக்கப்பட்டு காட்சிகள் எடுப்பதற்கான குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும். விசாரித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பேன். அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் எடுப்பதற்கு வனத்துறையோ, அரசோ உறுதுணையாக இருக்காது.

அவ்வாறு அனுமதி பெற்றிருந்தாலும் கூட அந்த அனுமதிக்கு உட்பட்ட விஷயங்களை மீறியிருக்கிறார்களா? என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு, அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...