தாராபுரத்தில் விவசாயிக்கு நஷ்டஈடு தொகை வழங்காத விவகாரம் - ஆர்.டி.ஓ.வாகனத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு!

தாராபுரத்தில் நல்லதங்காள் ஓடை அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்காததால், தாராபுரம் ஆர்.டி.ஓ. வாகனத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. குமரேசன் உறுதி அளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நல்லதங்காள் ஓடை அணை உள்ளது.

இந்த அணை கட்டுவதற்கு அந்த பகுதியில் பொதுப்பணித்துறையினர் சார்பில் கடந்த 2000 ஆண்டு சுமார் 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அந்த நிலத்துக்கான 87 விவசாயிகளுக்கு நீதிமன்ற மூலம் நஷ்ட ஈடு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு கூறப்பட்டது. ஆனால், 23 ஆண்டுகள் ஆகியும் இதுவரை விவசாயிகளுக்கு நஷ்டஈடு தொகை வழங்கப்படவில்லை.

பொன்னிவாடி கிராமம் எழுகாம்பலசை சேர்ந்த பழனிச்சாமி மகன் பெரியசாமி (வயது 38) என்பவரது 36 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்கு வருவாய்த்துறையினர் நஷ்ட ஈட்டு தொகையாக ரூ.19 ஆயிரத்து 500-யை நிர்ணயம் செய்தனர்.

இந்த நிலத்திற்கு கொடுத்த நஷ்ட ஈடு தொகை சந்தை மதிப்பை விட குறைவாக உள்ளதாக கூறி பெரியசாமி தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் அதிகபட்ச தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தாராபுரம் சார்புநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 36 சென்ட்க்கு 19ஆயிரத்து 500-ஐ உறுதி செய்து அதற்கு வட்டியுடன் சேர்ந்து ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 54 ரூபாய் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுபடி நஷ்டஈடு தொகை வட்டியுடன் வருவாய்த் துறையினர் செலுத்தாததால் பெரியசாமி தரப்பில் தாராபுரம் சப். கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

நஷ்டஈட்டு தொகை வழங்காததால் தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள் 2 கம்ப்யூட்டர், வாகனம், 2 டேபிள், ஆர்.டி.ஓ.வின் வாகனம் ஆகியவற்றை ஜப்தி செய்ய சார்பு நீதிபதி எம். தர்மபிரபு உத்தரவிட்டார்.

அதன்படி, தாராபுரம் நீதிமன்ற ஊழியர்கள் பாதிக்கப்பட்ட விவசாயி பெரியசாமி, மற்றும் நிலம் வழங்கிய மற்ற விவசாயிகளுடன் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒன்று திரண்டனர். ஆர்.டிஓ. அலுவலகத்தில் ஐப்தி உத்தரவை வழங்கினர். ஆர்.டி.ஓ. குமரேசன் கலெக்டரிடம் பேசி ஒரு வாரத்திற்குள் நஷ்டஈடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

அதன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். தாராபுரம் ஆர்.டி.ஓ.வின் வாகனத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...