இடிகரை அருகே அரசு பேருந்து வசதியில்லாமல் பள்ளி செல்ல மாணவ - மாணவிகள் அவதி!

இடிகரை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல அரசு பேருந்து வசதி இல்லாததால், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அப்துல் கலாம் நகர் பகுதி மாணவ மாணவிகள் அவதிப்பட்டு வருவதாகவும், மாணவர்கள் படிப்பை கருத்தில் கொண்டு, அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.



கோவை: இடிகரை அருகே அரசு பேருந்து வசதியில்லாததால் பள்ளிக்கு செல்ல மாணவ, மாணவிகள் சிரமப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை மாவட்டம் இடிகரை பேரூராட்சியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அப்துல்கலாம் நகர் பகுதியில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர்.

அதுவும் அத்திப்பாளையம் தொடக்கப்பள்ளி, இடிகரை தொடக்க பள்ளி, இடிகரை அரசு உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் படிக்க செல்கிறார்கள்.



இந்த பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து வந்து அங்கு நிற்கும் அரசு பேருந்தில் ஏறி பள்ளிக்கு செல்கின்றனர்.

மேலும் பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று வருவதால் அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர இயலவில்லை. இதனால் சில குழந்தைகள் பள்ளிக்கு வராமல் பாதியில் நின்று விடுகிறார்கள்.



பள்ளி குழந்தைகள் நடந்து வரும் பகுதி காட்டு பகுதியாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு இடிகரை பள்ளி சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் மனுக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

இதில் காலை நேரத்தில் அரசு பேருந்து ஒன்று ரங்கநாதர் பாலிடெக்னிக் அருகே வந்து நின்று செல்கிறது. அதுவும் சுமார் 20 நிமிடம் நிற்பதால் அந்த பேருந்தை எம்.ஜி.ஆர் நகருக்கு வரவழைத்தால் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும், பயமின்றி மாணவிகள் செல்லவும், அங்குள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் உதவும் என்று அந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...