உடுமலை ஜல்லிபட்டியில் குளத்தின் கரை, கால்வாய் கரை உடைப்பு - அதிகாரிகள் அலட்சியம்!

உடுமலை அடுத்த ஜல்லிப்பட்டியில் உள்ள குளத்தின் கரை மற்றும் பிஏபி கால்வாய் கரையை உடைத்து சட்டவிரோதமாக நீரை வெளியேற்றி மீன் பிடிக்கப்பட்டு உள்ளது குறித்து தகவல் தெரிவித்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே ஜல்லிப்பட்டியில் சட்டவிரோதமாக குளத்தின் கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஜல்லிபட்டியில், 20 ஏக்கர் பரப்பளவில், குளம் ஒன்று அமைந்துள்ளது. கடந்தாண்டு பெய்த பருவ மழையின் காரணமாக குளம் நிரம்பி காணப்பட்டது.



2 தினங்களுக்கு முன், குளத்தின் கரையை உடைத்தும், பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கான்கிரீட் கரையை உடைத்தும், குளத்தில் இருந்த பெருமளவு நீர் முறைகேடாக வெளியேற்றப்பட்டு, மீன் பிடிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து தகவல் கிடைத்ததும், அங்கு சென்ற விவசாயிகள், கரை உடைப்பை அடைத்தனர். மேலும், இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், குளத்தையும், பி.ஏ.பி., கால்வாயையும் உடைத்தவர்கள் மீது, துறை அதிகாரிகள் போலீசில் புகார் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.



குளத்தின் கரையை பலப்படுத்தவும், குளத்திலிருந்து பி.ஏ.பி., கால்வாய்க்கு தோண்டப்பட்ட குழி மற்றும் பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கரை உடைப்பு, கீழ் மட்ட பாலம் பராமரிப்பு குறித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியும் காட்டாமல் கால்வாய் கரையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...