உதகையில் நீலகிரி வனத்துறையினருக்கான திறன் மேம்பாடு பயிற்சி முகாம் - ஏராளமான அதிகாரிகள் பங்கேற்பு!

உதகை அருகேயுள்ள கேர்ன்ஹில் பொருள் விளக்க மையத்தில் நடைபெற்ற திறன் மேம்பாடு பயிற்சி முகாமில், நீலகிரி வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நீலகிரி: உதகை அருகே வனப்பணியாளர்களுக்கு “திறன் மேம்பாடு பயிற்சி” முகாம் நடைபெற்றது.



உதகை அருகேயுள்ள கேர்ன்ஹில் பொருள் விளக்க மையத்தில் நீலகிரி வனக்கோட்ட வனப்பணியாளர்களுக்கு “திறன் மேம்பாடு பயிற்சி” முகாம் நடைபெற்றது.



வனப்பாதுகாவலர் மற்றும் முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் கௌதம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தீதடுப்பு காவலர்கள், அதிவிரைவு படை பணியாளர்கள் (RRT) ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



இதில் வன குற்றங்களை கண்டறிதல், வகைப்படுத்துதல், அதனை கையாளுதல், படிவங்கள் பூர்த்தி செய்தல் மற்றும் அதற்கான சட்டங்கள் குறித்த விவரங்கள் வனப்பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது.



மேலும், வனக்குற்றங்கள், வன உயிரின குற்றங்கள் மற்றும் இதர குற்றங்கள் தொடர்பான வனப்பணியாளர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.



பின்னர், Tamilnadu Forest Elite Force, வன உயிர் பயிற்சியகம் மூலம் நீலகிரி வனக்கோட்ட வனப்பணியாளர்களுக்கு தீ தடுப்பு முறைகள், தீ தடுப்பு கருவிகளை கையாளுதல், தீ நிகழ்வுகளின் போது எவ்வாறு செயல்படுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...