கோவையில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்-க்கு கண்ணீர் அஞ்சலி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கோவை மாவட்டம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


கோவை: தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்-க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என கூறப்படுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.



இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கோவை மாவட்டம் சார்பில் லூர்து பிரான்சிஸ் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து படுகொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

கோவை மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...