குடிநீர் கேட்டு மேட்டுப்பாளையம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டில் கடந்த 6 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே 6 நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே நகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வருவதில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வார்டு உறுப்பினர் கவிதா புருஷோத்தமன் தலைமையில் காட்டூர் ரயில்வே கேட் பகுதியில் காலி குடங்களுடன் திரண்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காட்டூர் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...