பல்லடம் அருகே சட்டவிரோத மதுவிற்பனை - பெண்கள் சாலைமறியல்!

பல்லடம் அடுத்த நடுவேலம்பாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ராஜா என்பவரின் வீட்டை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்ட நிலையில், தப்பியோடியவரை கைது செய்யக்கோரி, மாணிக்கபுரம் சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகே சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்ய கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையம் என்ற கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் அரசு மதுபான கடை இல்லாத நிலையில் இங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் பல்லடம் சென்று குடிமகன்கள் மது பாட்டில்களை வாங்கி வருகின்றனர்.



இந்நிலையில் இங்கு ராஜா என்ற நபர் வாடகை வீட்டில் தங்கி சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்வதாக கடந்த மூன்று மாதங்களாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இன்று ராஜா என்பவர் தனது வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த போது அப்பகுதி பெண்கள் அவரை கையும் களவுமாக பிடித்து அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.



அப்போது, மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பிடிபட்ட ராஜா தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், ராஜாவை கைது செய்யக்கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதால் வேலைக்கு செல்லும் ஆண்கள் அதிக விலை கொடுத்து மது பாட்டில்களை வாங்குவதாகவும், இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவதாகவும் பெண்கள் தெரிவித்தனர்.

24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதால் சம்பள பணம் முழுவதும் மது வாங்குவதற்கே செலவு செய்து விடுவதாகவும், பள்ளி மாணவர்கள் உட்பட அதிக விலை கொடுத்து மது பாட்டில்களை வாங்கி குடிப்பதாகவும், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் ராஜாவை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் மங்கலம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ராஜாவை கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...