குழந்தை கடத்தல் விவகாரம் எதிரொலி - திருப்பூர் அரசு மருத்துவமனையில் அதிரடி கட்டுப்பாடு

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டு, பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், பிறக்கும் குழந்தைகளை, தாய் தவிர யாரும் கொண்டு செல்ல அனுமதி இல்லை என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 22 ஆம் தேதி அன்று ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் குமார் கமலினி தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இவர்களுக்கு அருகில் எஸ்தர் என்பவர், அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உதவியாக உமா என்ற பெண் இருந்துள்ளார். மேலும் கமலினிக்கும் அவ்வப்போது உதவிகள் செய்து வந்தவர், நேற்று மாலை குழந்தையை பையில் வைத்து மறைத்து கடத்திச் சென்றார்.

இது தொடர்பாக அர்ஜுன் குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் எண்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் தங்கி இருந்த உமாவின் கணவர் விஜயை பிடித்து விசாரித்தனர்.



அதில் உமா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தனக்கு குழந்தை பிறந்துள்ளது என பொய்யாக சிகிச்சைக்கு சேர்ந்தது தெரியவந்தது.

உடனடியாக விரைந்து சென்ற தனிப்படை போலீசார், உமாவை கைது செய்து குழந்தையை மீட்டனர். மேலும் உமாவிடம் விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விஜய் என்பவரை காதல் திருமணம் செய்து திருப்பூரில் வசித்து வருவதும், இவர் கருவுற்று மூன்று மாதத்தில் கரு கலைந்ததால் விரக்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தை காவல்துறை பாதுகாப்புடன் மருத்துவர்கள் உதவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.



குழந்தையை கண்ட வட மாநில தம்பதியினர் குழந்தையை கண்ணீர் மல்க முத்தமிட்டு ஆரத் தழுவிக் கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், இரண்டு முறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுபவர்கள் பிரசவத்திற்குபின் குழந்தையை தாய் மட்டுமே கொண்டு வரவும், கொண்டு செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தாயை தவிர மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை கையாள அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் உறவினர்கள் உதவியாளர்கள் என யாரும் குழந்தைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட ஆண் குழந்தையின் தந்தை அர்ஜுன் பேசுகையில், குழந்தை காணாமல் போனது நிலையில் மிகவும் வருத்தம் அடைந்ததாகவும் காவல்துறையினரின் தொடர் முயற்சியால் தற்போது குழந்தை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் காவல்துறையினருக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...