கர்ப்பிணிப் பெண் இறப்பு - வால்பாறை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ கந்தசாமி நேரில் ஆய்வு!

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கர்ப்பிணிப் பெண் இறந்ததற்கு காரணம் என்னவென்று மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று கர்ப்பிணி பெண் இறந்ததை அடுத்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சந்திரா விசாரணை செய்தார்.

இந்நிலையில் இன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, வால்பாறை அரசு மருத்துவமனையில் காலை 8 மணி அளவில் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வில் கர்ப்பிணிப் பெண் இறந்ததற்கு காரணம் என்னவென்று மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மருத்துவர்கள், செவிலியர்கள், ஆப்ரேஷன் தியேட்டர் ஊழியர்கள், ரத்த வங்கி,மயக்க மருந்து மருத்துவர் போன்றவர்கள் இல்லாததால் நோயாளிகளை பொள்ளாச்சி பகுதிக்கு அனுப்ப நேரிடுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சில தினங்களாக வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதாலும், வடமாநில தொழிலாளர்களே சிறுத்தை தாக்கி படுகாயம் ஏற்படுத்தி உள்ள நிலையிலும் நேற்று அதேபோல் இஞ்சிப்பாறை பகுதியில் ஒரு தொழிலாளியை கரடி தாக்கியது.

அவரை பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.இது போன்று பிரச்சினைகள் வால்பாறை பகுதியில் உள்ளது.

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு அரசிடம் கோரிக்கை வைப்பதாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தெரிவித்தார். மேலும், இறந்த கர்ப்பிணி பெண் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு அவர் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.



இந்த ஆய்வின்போது, பொதுநகரச் செயலாளர் மயில் கணேசன் நகர துணை செயலாளர் பொன் கணேசன் ஐடி விங் நகர செயலாளர் சண்முகம் ஆர் ஆர் பெருமாள். மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் சசி, சுடர் பாலு, எஸ் கே எஸ் பாலு, மற்றும் பலர் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...