பல்லடம் அருகே 16 ஆண்டுக்குப்பின் நடந்த கோயில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம்புதூர் கிராமத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மாகாளியம்மன் மற்றும் விநாயகர் கோயில்களுக்கான கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில், சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் புதூர் கிராமத்தில் அருள்மிகு மாகாளியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இரண்டு கோவில்களும் புரனமைப்பு செய்யப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

கடந்த 24 ஆம் தேதி தீர்த்த கலசம் மற்றும் முளைப்பாரி எடுத்து விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேகப் பெருவிழா தொடங்கியது.



அம்பிகைக்கு முதற்கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, யாகசாலையில் இருந்து கோபுர கலசத்திற்கு தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.



மாகாளியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பின், மூலவர் சிலைகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...