கோவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

கோவையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை ஏழு கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கம் பல மாதங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் அதனை புதுப்பித்து தர பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வருகை புரிந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7 கோடி ரூபாய் மதிப்பில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.



அதன்படி, பழைய ஓடுதள பாதைகள் அனைத்தும் பெயர்த்து எடுக்கப்பட்டு சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட உள்ளது. மேலும் இங்கு மழை நீர் வடிகால் புதுபிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.



தற்போது இந்த புதுப்பிக்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பழைய ஓடுதள பாதைகள் அனைத்தும் அகற்றப்பட்டு சிந்தடிக்ஓடுதள பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை தரமாகவும் விரைந்தும் முடித்து தர வேண்டுமென விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...