பொள்ளாச்சி அருகே மின் கசிவால் தீவிபத்து - ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின

பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூர் கிராமத்தில் பிரபு என்பவர் வீட்டை பூட்டிவிட்டு தாயுடன் வேலைக்கு சென்ற நிலையில், மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முற்றுலுமாக எரிந்து சேதமடைந்த நிலையில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



கோவை: பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூர் கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது தாய் மகுடீஸ்வரியுடன் வசித்து வருகிறார். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.



இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று காலை வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, நண்பகல் நேரத்தில், பிரபுவின் வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தியதில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக வீடு தீப்பற்றி எரிந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டிவி, பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின. தீ விபத்திற்கு வேறு எதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...