தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - பரபரப்பு!

புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை, நெடுஞ்சாலை துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பு திமுக அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு ஊழியர் சங்கத்தின் சட்டப்பேரவையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறி, ஜாக்டோ ஜியோவின் கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு,

அன்பில் மகேஷ் ஆகியோர் கூறினர். ஆனால் அது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் ஏமாற்றி விட்டதாக அரசு ஊழியர்கள்குற்றம்சாட்டினர்.

இதேபோன்று மூலனூர், குண்டடம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பும் அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...