உடுமலை அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 கோடி முறைகேடு - கால்நடைகளுடன் விவசாயிகள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பணம் சுமார் 3 கோடிக்கு மேல் முறைகேடு செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் கால்நடைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள விருகல்பட்டி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 கோடி முறைகேடு செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை அடுத்த விருகல்பட்டி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வழங்கும் திட்டம், அடமான கடன் மற்றும் விவசாயிகள் இருப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சுமார் மூன்று கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விவசாயிகள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆத்திரமடைந்த நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு கால்நடைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது,

விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பயிர் கடன் மற்றும் அடமான கடன் இருப்புத் தொகையில் அதிமுகவை சேர்ந்த தலைவர் பிரகாஷ் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் கீதா ஆகியோர் பல கோடி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை பலமுறை கேட்டும் வழங்காத காரணத்தால் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் பேசி விவசாயிகளின் பணம் கிடைக்க உரிய வழிவகை செய்யப்படும் என கூறினர்.

இருப்பினும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் வந்து இன்று விசாரணை துவக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் செலுத்திய பணத்தில் 3 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...