உடுமலை நகர மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கூட்டம்

உடுமலை நகராட்சி தலைவராக மத்தீன் உள்ளார். இவர் நகராட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், திமுக நகரச் செயலாளர் வேலுசாமி தலைமையில் திமுக கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை நகர மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள்கட்சி அலுவலகத்தில் கூட்டம்நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க-26, கூட்டணி கட்சி-3 மற்றும் அ.தி.மு.க-3 என மொத்தம் 32 கவுன்சிலர்கள் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது. தலைவர் தேர்தலின் போது, தி.மு.க தலைமை அறிவித்த ஜெயக்குமாருக்கு எதிராக, அப்போதைய நகரச்செயலாளர் மத்தீன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நகரசெயலாளர் பொறுப்பிலிருந்து திமுக தலைமை அவரை நீக்கியது.

இந்நிலையில் 87 தீர்மானங்களுடன் நகராட்சி கூட்டத்திற்கு தலைவர் மத்தீன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தலைவர் மீதான அதிருப்தி காரணமாக தி.மு.க நகரச்செயலாளர் வேலுசாமி தலைமையில், கட்சி அலுவலகத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில், 'தினசரி சந்தை குத்தகை 1.10 கோடி ரூபாயாகும். குத்தகை நீடித்து அதே நபருக்கு, பாதியாக குறைத்து, லட்சம் 55 ரூபாய்க்கு வழங்க தீர்மானம் உள்ளிட்ட நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த, பெரும் தொகை கைமாறியுள்ளது.

இதுதவிர நிர்வாகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடக்கிறது. எனவே, தலைவர், தீர்மானங்களுக்கு எதிராக தனியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கட்சித்தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளோம்,” என்றனர்.

உடுமலை திமுக நகர மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் தனியாக கூட்டம் நடத்தியதால் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...