கோவையில் ரூ.16 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த ஜோசியர் - நிலத்தை அதிரடியாக மீட்ட மாநகராட்சி நிர்வாகம்

கோவையில் போலி ஆவணம் மூலம் மாநகராட்சிக்கு சொந்தமான 16 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரித்த வீட்டுமனை விற்பனையாளர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை கையகப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் நாராயணசாமி. இவர் வீட்டு மனை பிளாட்டுகள் விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு போலியான வரைபடம் மூலமாக விளாங்குறிச்சி ராமகிருஷ்ணா லே-அவுட் உள்ள பார்க் சைட் 36 சென்ட் நிலத்தை அவர் அபகரித்துள்ளார். இதனை அடுத்து கோவை மாநகராட்சி, மூன்று முறை நாராயணசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசுக்கு பதிலளிக்காத நாராயணசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



தற்போது, கோவை மாநகராட்சி ஜேசிபி வாகனம் மூலம் 36 சென்ட் இடமும் அதற்குள் கட்டப்பட்ட இரண்டு சென்ட் வீடு தரைமட்டம் ஆக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.



இதன் மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாராயணசாமி இதேபோல போலியான ஆவணங்கள் தயாரித்து வேறு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளாரா? எனவும் சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...