கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கிய மாநகராட்சி ஆணையர்!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ வாரம்தோறும்‌ புதன்கிழமை சாலையோர வியாபாரிகள்‌ நாள்‌ (Street Venders Day) கூட்டத்தில்‌ 400 சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.20,000‌ வீதம்‌ மொத்தம்‌ ரூ.80 லட்சத்திற்கான வங்கி கடனுதவியை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌‌ வழங்கினார்


கோவை: கோவையை சேர்ந்த 400 சாலையோர வியாபாரிகளுக்கு 80 லட்சம் மதிப்பிலான கடனுதவியை மாநகராட்சி ஆணையர் பிரதாப் வழங்கினார்.

சாலையோர வியாபாரிகள்‌ மேம்பாட்டு‌ திட்டத்திற்கு ஒன்றிய அரசின்‌ PMSVANidhi திட்டம் (SUVI)செயல்படுத்தப்பட்டது. கோவை‌ மாநகராட்சியில்‌ 6,169 சாலையோர வியாபாரிகள்‌ கண்டறியப்பட்டு அவர்களுக்கு 2018ஆம்‌ ஆண்டு சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

ஒன்றிய அரசின்‌ மூலம்‌ 2019- 2020-ம்‌ ஆண்டு கொரோனா நிவாரண தொகை ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. மேலும்‌ 2020-ல்‌ கூடுதலாக 11‌,000 சாலையோர வியாபாரிகளை கண்டறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு SUSV திட்டத்தின்‌ மூலம்‌ ரூ.10 ஆயிரம்‌ வட்டி மானியத்துடன்‌ வங்கி கடன்‌ வழங்கப்பட்டது.

2021-ல்‌ மேலும்‌ கூடுதலாக 4,450 இலக்கு நாணயிக்கப்பட்டு சாலையோர வியாபாரிகள்‌ கண்டறியப்பட்டு மொத்தம்‌ 21,619 சாலையோர வியாபாரிகளுக்கு கடன்‌ வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கோவை‌ மாநகராட்சியில் இருந்து சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடனுக்காக வங்கிகளுக்கு பரிந்துரை கடிதம்‌ வழங்கப்பட்டது. இதுவரை 10,143 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000‌ வங்கி கடன்‌ வழங்கப்பட்டுள்ளது.

முதல்‌ தவணை கடன்‌ பெற்றவர்கள்‌ கடன்‌ தொகை முழுவதையும்‌ கட்டி முடித்த 2,581 சாலையோர வியாபாரிகளுக்கு இரண்டாம்‌ தவணையாக ரூ.20 ஆயிரம்‌ நேரடியாக வங்கிகளின்‌ மூலமாக வழங்கப்பட்டது. மேலும்‌, 2ம்‌ தவணை கட்டி முடித்த 43 சாலையோர வியாபாரிகளுக்கு 3ம்‌ தவணையாக ரூ.50 ஆயிரம்‌ நேரடியாக வங்கிகளின்‌ மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இப்பணியை மேலும்‌ துரிதப்படுத்த ஒன்றிய அரசின்‌ வழிகாட்டுதலின்படி வாரம்‌ தோறும்‌ புதன்‌ கிழமை சாலையோர வியாபாரிகள்‌ நாள்‌ (Street Venders Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



இதனையொட்டி நேற்றைய தினம் நடைபெற்ற சாலையோர வியாபாரிகள்‌ நாள்‌ (Street Venders Day) கூட்டத்தில்‌ 400 சாலையோர வியாபாரிகளுக்கு தலா 20 ஆயிரம்‌ வீதம்‌ மொத்தம்‌ ரூ.80 லட்சம்‌ கடனுதவியாக மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ வழங்கினார்‌.



இந்நிகழ்வில்‌ உதவி ஆட்சியர் (பயிற்சி) செளமியா ஆனந்த்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ சிவகுமார்‌‌, நகர்‌ நல அலுவலர்‌ தாமோதரன்‌, மாநகராட்சி சாலையோர வியாபாரிகள்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ பாலசுந்தரம்‌ மற்றும்‌ சாலையோர வியாபாரிகள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...