வால்பாறையில் சத்துணவு சாப்பிட்ட 21மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி - மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 21 மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: வால்பாறையில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 43 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் சாப்பிட்டு உள்ளனர். இதை தொடர்ந்து மாணவர்களுக்கு சத்து மாத்திரையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை சாப்பிட்ட ஒரு சில மாணவர்களுக்கு மாலை 3 மணி அளவில் லேசான தலைவலியும், வாந்தியும் ஏற்பட்டு உள்ளது.



இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் ஆட்டோ மற்றும் தனியார் வாகனம் மூலம் 21 குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மேலும் சில தினங்களாக இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் குடிநீர் கருப்பு நிறத்தில் வருவதாகவும், அதை குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...