உடுமலை அருகே நூற்பாலையில் தீ விபத்து - ரூ.40 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து நாசம்

உடுமலைப்பேட்டை அருகே உள்ள பாலப்பம்பட்டி அருகில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான கழிவு பஞ்சுகள் தீயில் எரிந்து நாசமானது.


திருப்பூர்: உடுமலை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள பாலப்பம்பட்டி அருகில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு வெளியில் நூல் தயாரிப்பதற்கான மூலப்பொருளான கழிவு பஞ்சை பல அடுக்குகளாக அடுக்கி வைத்துள்ளனர்.



இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சில் தீ பிடித்தது. உடனே உடுமலைப்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.



இந்த தீ விபத்தில் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான கழிவுப்பஞ்சுகள் நாசமானது.



மேலும் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை ஆலைக்குள் பரவவிடாமல் துரிதமாக செயல்பட்டதால் ஆலைக்குள் இருந்த இயந்திரங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...