கோவை பாலக்காடு சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து - கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தால் பரபரப்பு

கோவை - கேரளா எல்லையான வாளையார் அருகே டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், டேங்கர் லாரியில் இருந்த கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வாளையார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: வாளையார் அருகே லாரிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து, கோவையில் உள்ள சோடா தயாரிக்கும் நிறுவனத்திற்கு டேங்கர் லாரி மூலம் கார்பன்-டை ஆக்ஸைடு ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று, தமிழக - கேரளா எல்லையான வாளையார் வட்டப்பாரா அருகே வந்தபோது, கோவைக்கு காய்கறி லோடு ஏற்ற வந்த மற்றொரு லாரி, டேங்கர் லாரியின் பின்புறம் மோதியது.



இதில் டேங்கர் லாரியின் வால்வில் உடைப்பு ஏற்பட்டு, உள்ளே இருந்த கார்பன்-டை ஆக்ஸைடு பயங்கர சத்தத்துடன் வெளியேறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வாளையார் போலீசார் உடனடியாக பாலக்காடு - கோவை நெடுஞ்சாலையில் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தினர்.

பின்னர் அங்கு வந்த கஞ்சிக்கோடு தீயணைப்புத் துறையினர் கார்பன்-டை ஆக்ஸைடு வெளியேறுவதை தடுக்க தீவிரமாக போராடினர். சுமார் 2 மணி நேரம் போராடி டேங்கர் லாரியில் உடைப்பு ஏற்பட்ட வால்வை தீயணைப்புத் துறையினர் சரி செய்தனர்.

கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அதிக சத்தத்துடன் கார்பன்-டைஆக்ஸைடு வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வாளையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...