தாராபுரம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் - வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

தாராபுரம் அருகே புதுப்பை கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் பழைய நடைமுறையை தொடருங்கள் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: தாராபுரம் அருகே கோவிலில் ஏற்பட்ட மோதல் காரணமாக வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதுப்பை கிராமத்தில் பழமையான அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபா ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுப்பை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குலத்தவர்கள் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக பூஜை செய்யாமல் வந்தனர். இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் குலத்தவர்கள் சார்பில் வருடம் தோறும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு வந்தனர்.



இதனை பொறுத்துக் கொள்ளாத மூன்று குலத்தவர்கள் வேண்டுமென்றே பூஜையை நிறுத்துவதற்காக வழக்கு தொடர்ந்தனர். அப்போது இரு தரப்பினரும் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு அன்னதானம் நடைபெறும் போது கோவில் மண்டபத்தை பயன்படுத்தாமல் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு தரப்பினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்து வருவதாக குலத்தவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் பழைய நடைமுறையை தொடருங்கள் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...