உதகையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனையா? - அதிகாரிகள் ஆய்வு

உதகை மார்க்கெட்களில் செயற்கையாக கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


நீலகிரி: உதகை மார்க்கெட்டில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் செயற்கையாக கார்பைடு கற்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா என்பதை கண்டறிந்து, இயற்கையான முறையில் பழுத்த பழங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன என்பதை அதிகாரிகள் உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், உணவுப் பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், உதகை வட்டாட்சியர் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர், உதகை பழ மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் அழுகிய நிலையில் இருந்த சுமார் 12 கிலோ மாம்பழங்கள், 5 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் 5 பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் இதர பழங்களை உண்ணும் போது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளால் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யும் பழ வியாபாரிகள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...