கோவையில் சீர்மிகு நகர திட்டப்பணிகள் குறித்து மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு!

கோவை‌ மாநகராட்சியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு மின்‌ நிதி மற்றும்‌ உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர்‌ அம்பலவாணன்‌ மற்றும் மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


கோவை: கோவையில், சீர்மிகு நகர திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு மின்‌ நிதி மற்றும்‌ உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர்‌ அம்பலவாணன்‌ ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட‌ வாலாங்குளத்தில்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ சீர்மிகு நகர திட்டப்பணிகளை தமிழ்நாடு மின்‌ நிதி மற்றும்‌ உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர்‌ அம்பலவாணன்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்‌.



தொடர்ந்து, உக்கடம்‌ வாலாங்குள கரைகளில்‌ சீரமிகு நகர திட்டத்தின் கீழ்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைப்பு பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்,

பின்னர் பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க அறிவுறுத்தி, குளக்கரைகளில்‌ வெட்டி வேர்‌ போன்ற பயனுள்ள செடிகளை நட்டு பராமரித்திடவும்‌ கேட்டுக்கொண்டனர்‌.

அதனைத்‌ தொடர்ந்து, கழிவு நீர்‌ சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு, வாலாங்குளத்தில்‌ கழிவு நீர்‌ கலப்பதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ வகையில்‌ கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான‌ பணியினை விரைவாக செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினர்‌.

மேலும்‌, கோவை மாநகரில்‌ வசித்துவரும்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ சுற்றுலா பயணிகள்‌ கண்டுகளிக்கும்‌ வகையில்‌ சிறப்பாக பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு உள்ளது என பாராட்டினார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, அரசு மருத்துவக்கல்லாரி மருத்துவமனை எதிரில்‌ உள்ள பேருந்து நிலையத்தை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி பேருந்து நிலையம்‌ சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்‌.



பின்னர்‌, உக்கடம்‌ வாலாங்குளம்‌, வின்சென்ட்‌ சாலை பகுதியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்‌ ரூ.67.866 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ பணிகளின்‌ ஒரு பகுதியாக மரக்கன்றுகள்‌ நட்டு பராமரிக்கப்பட்டு வரும்‌ பூங்காவினை நேரில்‌ பார்வையிட்டார்.

அப்போது, சிறப்பான முறையில்‌ பூங்காவில்‌ மரக்கன்றுகள்‌ நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும், இதேபோல் இதர குளங்களின்‌ கரைகளிலும்‌ பயனுள்ள மரக்கன்றுகள்‌ நட வேண்டும் எனவும்‌ கேட்டுக்கொண்டார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ ஐ லவ்‌ கோவை, பொது மக்கள்‌ அமரும்‌ இருக்கைகள்‌, மின்விளக்குகள்‌ போன்றவற்றை பார்வையிட்டு, சிறப்பாக பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்‌.



மேலும்‌, மேம்பாட்டு பணிகளின்‌ ஒரு பகுதியாக வாகனங்களின்‌ பயனற்ற உதிரி பாகங்களை கொண்டு மறு சுழற்சி முறையில்‌ மாதிரி கார்‌, கிராம போன்‌, அடி தண்ணீர்‌ குழாய்‌, பழைய தொலைபேசி போன்றவை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



பின்னர்‌, தெற்கு மண்டலம்‌ குறிச்சி குளத்தில்‌ சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்‌ ரூ.52.16 கோடி மதிப்பீட்டில்‌ பல்வேறு பணிகள்‌ நடைபெற்று வருகிறது. அதில்‌ ஒரு பகுதியாக உலக தரத்தில்‌ திருவள்ளுவர்‌ சிலை அமைத்தல்‌ தமிழர்‌ கலாச்சாரத்தை விளக்கும்‌ வகையில்‌ ஜல்லிக்கட்டு காளை, பாரம்பரிய கலாச்சார ஓவியங்கள்‌, சிலைகள்‌ அமைத்தல்‌, வண்ண மின்விளக்கு அமைத்தல்‌, மரக்கன்று நடுதல்‌ மற்றும்‌ நடைபாதை உள்ளிட்ட கட்டுமானப்பணிகளை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் பணியினை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும்‌, குளங்களில்‌ உள்ள ஆகாயத்தாமரை போன்ற செடிகளை அகற்றவும்‌ அறிவுறுத்தினார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...