கோவையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி செல்போன் பறிப்பு - இளைஞர்கள் 3 பேர் கைது!

கோவை சுப்பிரமணியம்பாளையம் அருகே ஆட்டோ ஓட்டுனர் ஷேக் மொய்தீன் என்பவரை கத்தியால் தலையில் தாக்கிவிட்டு செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணி பாரத், ரமேஷ்குமார் மற்றும் சாய்பாபா காலனியை சேர்ந்த கவுதம் சித்தார்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி செல்போனை பறித்துச் சென்ற இளைஞர்கள் மூவரை துடியலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சுப்பிரமணியம்பாளையம் அருகேயுள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் மொய்தீன். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து அவரது செல்போனை கேட்டுள்ளனர்.

அப்போது அவர் செல்போனை தர மறுத்ததால், அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் ஷேக் மொய்தீன் தலையில் தாக்கிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில், காயமடைந்த ஷேக் மொய்தீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதனிடையே ஷேக் மொய்தீன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார், ஷேக் மொய்தீனை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற கவுண்டம் பாளையத்தை சேர்ந்த மணி பாரத், ரமேஷ்குமார் மற்றும் சாய்பாபா காலனியைச் சேர்ந்த கவுதம் சித்தார்தன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...