வெள்ளலூர் அரசு பள்ளியில் போலீஸ் பாய்ஸ் கிளப் - கோவை மாநகர காவல்துறை சார்பில் தொடக்கம்!

கோவை வெள்ளலூர் அரசு பள்ளியில் மாநகர காவல்துறை சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்கும் விதமாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘போலீஸ் பாய்ஸ் கிளப்’-ஐ மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.


கோவை: வெள்ளலூர் அரசு பள்ளியில் மாநகர காவல்துறை சார்பில் போலீஸ் பாய்ஸ் கிளப்பை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகரம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகர போலீசார் தனியார் பங்களிப்புடன் கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் “போலீஸ் பாய்ஸ் கிளப்” என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.



இதன் துவக்க விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கிளப்பை தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பொதுவாக மாணவர்கள் இரண்டு போதைக்கு அடிமையாகிறார்கள். ஒன்று செல்போன் மற்றொன்று உடலுக்கு போதை தரக்கூடிய போதை பொருட்கள்.

இதனை தடுத்து, மாணவர்களை நல்வழிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக மாணவர்களை நல்வழிப்படுத்த விளையாட்டு மற்றும் புத்தகங்கள் மூலமே அவர்கள் கவனத்தை மாற்ற முடியும்.

எனவே, மாணவர்கள் இதற்காக பள்ளி மற்றும் வீடுகளிலும் நேரத்தை செலவழிக்க வேண்டும். அவற்றை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், மாணவர்கள் செல்போனுக்கு அடிமையாகக் கூடாது.

செல்போனை அவர்கள் பயன்படுத்தும் போது, அவர்கள் அதிகளவு பொழுதுபோக்கும் இணையதளங்களையே அந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் அவர்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கும். இதனால், மாணவர்கள் அதற்கு அடிமையாகி வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். எப்போதும் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவற்றை பெற்றோர்களும் உற்று கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...