கோவை மத்திய மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மத்திய மண்டலத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.65க்கு உட்பட்ட பாரதி நகர்‌ முதல்‌ வீதியில்‌ மாநகராட்சி தூய்மை பணியாளா்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அப்போது, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்காத குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.65க்கு உட்பட்ட பாரதி நகர்‌ முதல்‌ வீதியில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்‌ குறித்து பணியாளர்களிடம்‌ கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்‌‌, கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்‌.



கோவை மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.63க்கு உட்பட்ட வள்ளியம்மை வீதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள மாநகராட்சி கழிப்பிடத்தை புனரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



கோவை‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34க்கு உட்பட்ட கவுண்டம்பாளையம்‌, ஜீவா நகரில்‌ ரூ.5.20 கோடி மதிப்பீட்டில்‌ 1,680 மீட்டர்‌ தொலைவிற்கு மழைநீர்‌ வடிகால்‌ கட்டுதல்‌ மற்றும்‌ சிறுபாலங்கள்‌, ரூ.1.8 கோடி மதிப்பிட்டில்‌ 850 மீட்டர் தொலைவிற்கு தார்‌ சாலை அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு, பணியை விரைவாக செய்து முடிக்க பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

அப்போது, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்‌ ஜீவராஜ்‌, சுகாதார ஆய்வாளர்‌ சந்திரசேகர் மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...