வால்பாறையில் சத்துணவு சாப்பிட்ட 37 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் - திமுக மாவட்ட செயலாளர் நேரில் நலம் விசாரிப்பு!

கோவை மாவட்டம் வால்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நேற்று மதியம் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட 37 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாணவர்களை திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



கோவை: வால்பாறையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 37 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மதியம் சத்துணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது சத்துணவு சாப்பிட்ட 37 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் தலைவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின் 29 குழந்தைகள் நேற்று மாலையே குணமாகி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும், 8 குழந்தைகள் மட்டும் இரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.



இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை, திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனைக்கான தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இது தொடர்பாக தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலும் தளபதி முருகேசன் ஆய்வு மேற்கொண்டார்.



நீண்ட நாட்களாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் இருக்கும் படகு இல்லத்தை பார்வையிட்டு, படகு இல்லத்தை விரைவில் திறக்க அமைச்சரிடம் பேசுவதாகவும், இந்த ஆண்டு கோடை விழா நடக்க அமைச்சரிடம் வலியுறுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வின் போது, தலைமை செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி, பொது குழு உறுப்பினர் ரகு துரைராஜ், ஒன்றிய கவுன்சிலர், நகர செயலாளர் சுதாகர், மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி, நகர துணை செயலர் சரவண பாண்டியன், மாவட்ட பிரதிநிதி டேன்சின், நகர மன்ற துணை தலைவர் செந்தில், நகர பொருளாளர் அம்பிகை சுப்பையா, 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் பாஸ்கர், இளைஞர் அணி சபரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...