கோவையில் பில்லூர்-III திட்டத்திற்கான கட்டுமான பணிகள் குறித்து உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவா்‌ ஆய்வு!

கோவையில் குடிநீருக்காக ரூ.779 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பில்லூர்-III திட்டத்திற்கான கட்டுமான பணிகள் குறித்து தமிழ்நாடு மின்‌ நிதி மற்றும்‌ உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவா்‌ அம்பலவாணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டனர்.



கோவை: கோவை குடிநீர் பில்லூர்-III திட்டத்திற்கான கட்டுமான பணிகள் குறித்து தமிழ்நாடு மின்‌ நிதி மற்றும்‌ உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவா்‌ அம்பலவாணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாநகராட்சியில்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ள மற்றும்‌ புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பவானி ஆற்றின்‌ நீர் ஆதாரமாக கொண்ட குடிநீர் பில்லூர்‌-।।। திட்டம்‌ ரூ.779 கோடி மதிப்பில்‌ மேட்டுப்பாளையம்‌, நெல்லித்துறை ஊராட்சி, முருகையன்‌ பரிசல்துறை, மருதூர்‌ ஊராட்சி தண்டிப்பெருமாள்புரம்‌ மற்றும்‌ கட்டன்மலை ஆகிய இடங்களில்‌ நடைபெற்று வரும்‌ கட்டுமான பணிகளை தமிழ்நாடு மின்‌ நிதி மற்றும்‌ உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவா்‌ அம்பலவாணன்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது, வரும் ஜுன்‌ இரண்டாம்‌ வாரத்திற்குள்‌ சோதனை ஓட்டம்‌ மேற்கொள்ளும்‌ வகையில்‌ போர்க்கால அடிப்படையில்‌ பணிகளை செய்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்‌.

கோவை மாநகராட்சிக்கு குடிநீர்‌ ஆதாரமாக விளங்கும்‌ பில்லூர் அணையிலிருந்து குடிநீர் வழங்க பில்லூர்‌-॥। திட்டம்‌ 2035ஆம்‌ ஆண்டு கோவை‌ மாநகராட்சியிலுள்ள மக்கள்‌ தொகையை கருத்தில்‌ கொண்டு திட்டம்‌ தயாரிக்கப்பட்டு உள்ளது.



இத்திட்டம்‌ ரூ.779 கோடி மதிப்பில்‌ மேட்டுப்பாளையம்‌, நெல்லித்துறை ஊராட்சி, முருகையன்‌ பரிசல் துறை, மருதூர்‌ ஊராட்சி, கண்டிப்பெருமாள்புரம்‌ மற்றும்‌ கட்டன்மலை ஆகிய இடங்களில்‌ கட்டுமான பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் குழாய்‌ பதித்தல்‌ போன்ற பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

இப்பணிகளில்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, வருகின்ற ஜுன்‌ இரண்டாம்‌ வாரத்திற்குள்‌ சோதனை ஓட்டம்‌ மேற்கொள்ளும்‌ விதத்தில்‌ போர்கால அடிப்படையில்‌ பணிகளை செய்து முடித்திட அறிவுரைகள்‌ வழங்கப்பட்டு உள்ளது.

மேட்டுப்பாளையம்‌ நெல்லித்துறை ஊராட்சி, முருகையன்‌ பரிசல் துறை பகுதியில்‌ ரூ.134 கோடி மதிப்பீட்டில்‌ தலைமை நீரேற்று நிலையம்‌ கட்டுமான‌ பணி தற்போது 95 சதவீதமும்‌, மின்சார இணைப்பு பணிகள்‌ சுமார்‌ 80 சதவீதமும்‌ நடைபெற்று உள்ளது. மீதமுள்ள பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனை‌ தொடர்ந்து, முருகையன்‌ பரிசல்துறை பகுதியில் இருந்து சுமார்‌ 16 கிலோ மீட்டா தொலைவிலுள்ள மருதூர்‌ பகுதிக்கு குடிநீர் பம்பிங்‌ செய்து கொண்டு வரப்படுகிறது. மருதூர்‌ ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம்‌ பகுதியில்‌ பில்லூர்‌ அபிவிருத்தி திட்டம்‌-III, ரூ.104.900 கோடி மதிப்பீட்டில்‌ 178 MLD குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலைய வடிவமைப்பு மற்றும்‌ கட்டுமான பணிகள்‌ இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மீதமுள்ள பணிகள்‌ விரைவில்‌ முடிக்க அறிவுறுத்தப்பட்டு, கட்டுமான பணிகளின்‌ தரமும்‌ ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தண்டிப்பெருமாள்புரம்‌ பகுதியிலிருந்து சுமார்‌ 16 கிலோ மீட்டர்‌ தொலைவிலுள்ள கட்டன்‌ மலைக்கு கண்ணர்‌ கொண்டு வரப்படுகிறது.



அதன் பின்னர்‌, கட்டன்மலை பகுதியில்‌ ரூ.62.00 கோடி மதிப்பில்‌ 900 மீட்டர் தொலைவிற்கு சுரங்கம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான முறையில்‌ சுரங்கம்‌ அமைக்கப்பட்டு உள்ளது.

சுரங்க பகுதியில்‌ குடிநீர் குழாய்‌ பதிக்கும்‌ பணியை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இருந்து பன்னிமலை பகுதியில்‌ 146 லட்சம்‌ கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம்‌ பகுதிக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிட ஏதுவாக போர்க்கால அடிப்படையில்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொண்டு பணியினை பருவமழை துவங்குவதற்குள்‌ முடிக்க வேண்டும் எனவும்‌ அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு மின்‌ நிதி மற்றும்‌ உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக பொது மேலாளர்‌ முருகன்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய மேற்பார்வை பொறியாளர்‌ ராஜு, செயற்பொறியாளர்‌ செல்லமுத்து, உதவி செயற்பொறியாளர்கள்‌ செந்தில்குமார்‌, பட்டன்‌, பாலமுருகன்‌(மாநகராட்சி), உதவி பொறியாளா்‌ சாம்ராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...