திருப்பூர் குமரன் சாலையில் பைக்குகள் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் பலி, மூவர் காயம்!

திருப்பூர் குமரன் சாலையில் மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

திருப்பூரில் பிரதான சாலையில் ஒன்றான குமரன் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும். இதையடுத்து போக்குவரத்து போலீசார் சார்பில் கனரக வாகனங்கள் மாநகர எல்லைக்குள் வருவதற்கு நேர கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டது.



இதனிடையே குமரன் சாலையில் மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு கார்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.



இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.



இதை அடுத்து படுகாயம் அடைந்த மூன்று பேரும் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் லாரியில் அதிக எடை ஏற்றி வந்ததால் லாரியின் பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...