மடத்துக்குளம் அருகே மளிகை கடையில் செல்போன் திருட்டு - இளைஞர்கள் மூவர் கைது!

உடுமலை அடுத்த மடத்துக்குளம் அருகே மளிகைக்கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து, உரிமையாளரின் விலை உயர்ந்த செல்போனை திருடிச் சென்ற இளைஞர்கள் 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மளிகை கடை உரிமையாளரின் செல்போனை திருடிச் சென்ற மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மடத்துக்குளத்தை அடுத்த கொழுமம் சமத்துவபுரம் பகுதியில், முத்துச்சாமி என்பவரது மனைவி ராணி (46) மளிகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவருடைய மளிகைக் கடைக்கு 3 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் ராணியிடம் பீடி, தீப்பெட்டி, வாட்டர் பாட்டில், தண்ணீர் டம்ளர் போன்றவற்றை வாங்கியுள்ளனர்.

அதற்கான பணத்தை பெற்றுக்கொண்ட ராணி, வேறு வேலையாக கடைக்கு உள்ளே சென்றுள்ளார். அப்போது, சத்தமில்லாமல் கடைக்குள் நுழைந்த இளைஞர்கள் அங்கு வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடினர். ராணி திரும்பி வந்து பார்த்தபோது செல்போன் திருட்டுப்போனது தெரிய வந்தது.

உடனடியாக சம்பவம் குறித்து குமரலிங்கம் காவல் நிலையத்தில் ராணி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்போன் சிக்னல் மற்றும் நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்தனர்.

இந்த செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்கள் கிருஷ்ணாபுரம் சக்திநகர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகன் அருண் குமார் (23), ருத்ராபாளையம் குருவக்களம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் சந்தோஷ் என்ற மணிகண்டன் (24) மற்றும் கிருஷ்ணாபுரம் ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த கிட்டான் என்பவரது மகன் முத்துமாணிக்கம் (22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து செல்போனை மீட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...