கோட்டை மாரியம்மன் கோவில் முடி காணிக்கை டெண்டரை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு - பாஜக ஆர்ப்பாட்டம்!

மடத்துக்குளம் அருகிலுள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கை டெண்டரை தனியாருக்கு விடும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் பிரபு தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகிலுள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கை டெண்டரை தனியாருக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மடத்துக்குளம் அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முடி காணிக்கையை தனியாருக்கு டெண்டர் விடும் கொழுமம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்டச் செயலாளர் தெய்வக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அன்பு, மாவட்ட ஐடி பிரிவு தலைவர் குணசேகர் , உடுமலை வடக்கு ஒன்றிய தலைவர் நாகமாணிக்கம், உடுமலை மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், உடுமலை மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன், மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் மணியன் உள்ளிட்ட மாநில மாவட்ட மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...