முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகேயுள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் வளர்க்கப்பட்டு வந்த மசினி என்ற பெண் யானை திடீரென தாக்கியதில், பாகனாக பணியாற்றி வந்த பாலன் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


நீலகிரி: முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களை தாக்கி கொல்லும் யானைகள் மற்றும் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள் இந்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு தாயை பிரிந்த நிலையில் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்ட மசினி யானை 2013 ஆம் ஆண்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வழங்கப்பட்டது.

ஆறு ஆண்டுகளாக கோவிலிலிருந்த மசினி யானை 2019 ஆம் ஆண்டு பாகன் கஜேந்திரனை தாக்கி கொன்றது. இதனை தொடர்ந்து அந்த யானை மீண்டும் முதுமலை வளர்ப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அந்த யானை தற்போது அபயாராண்யம் முகாமில் இருந்து வரும் நிலையில், இன்று காலை பாகன் பாலன் உணவு அளித்து விட்டு அழைத்து சென்ற போது திடீரென அவரை தாக்கியது. அதில் பலத்த காயமடைந்த பாலன் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...