சித்திர சாவடி பாசன வாய்க்காலில் உள்ள கழிவுநீர் குழாய்களை அகற்றுக..! - பொதுமக்கள் கோரிக்கை!

கோவை சித்திர சாவடி பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு மாவட்ட நிர்வாகம் பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை அனுமதிப்பதுடன் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


கோவை: சித்திர சாவடி பாசன வாய்க்காலில் உள்ள கழிவுநீர் குழாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாலு, கந்தா, சின்னசாமி ஆகியோர்கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, சித்திரைச் சாவடி பாசன வாய்க்காலில் 24 - 25 மதகுகளுக்கு இடையே பெரிய பள்ளத்தில் மழை நீர் வாய்க்காலில் கலந்து சேதாரம் ஏற்படாமல் இருக்க வெள்ள நீர் நொய்யல் ஆற்றிற்கு சென்று கலக்கும் வகையில் உயர்மட்ட பாலம் 450 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்று வரை உபயோகத்தில் உள்ளது.



கடந்த ஏப்ரல் 2022-ல் அந்த பாலத்தின் மேற்பகுதியில் இயந்திரத்தை கொண்டு இரண்டு துளைகள் அமைக்கப்பட்டு பள்ளத்தில் வரும் கழிவு நீர் வாய்க்காலில் திருப்பி விடப்பட்டது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அதே மாதத்தில்பொதுப்பணித்துறை கான்கிரீட் கலவை கொண்டு அவைகளை அடைத்து விட்டனர்.

தொடர்ந்து பாலத்தின்கரையில் 2022 ஜூன் மாதம்மேற்கு பாலத்தில் வடபுறம் கற்களை அகற்றி கரையை உடைத்து பி.வி.சி குழாய் அமைத்து மீண்டும் பாசன வாய்க்காலில் கழிவுநீர் திருப்பி விடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின்உத்தரவின்படி பொது பணித்துறை உதவி பொறியாளர் 2022 டிசம்பர் மாதம்கழிவுநீர் செல்லும் பி.வி.சி குழாயை அடைத்துள்ளார். ஞானசுந்தரம் என்பவர் பொது பணித்துறை உதவி பொறியாளர் மீது, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் குழாய் அடைப்பை நீக்கி மீண்டும் கழிவுநீர் பாசன வாய்க்காலில் திருப்பி விட்டுவிட்டார்.



பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த விடாமல், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் செயல்படுகின்றனர். பிரச்சனையை திசை திருப்பி குற்றவியல் நடைமுறை சட்டம் செக்சன் 133இன் படி நடவடிக்கை எடுப்பதாக கூறி வருகின்றனர்.

உயர்மட்ட பாலத்தை கடந்து செல்லும் நீர்வழிப்பாதை ஆரம்பத்தில் 80 அடியும் ஆற்றுக்கு செல்லும் வழியில் குறைந்தபட்சம் 30 அடி அகலமும் கொண்டு சுமார் 6.70 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

ஆனால், தற்சமயம் 12 அடி அகல தடம் போக மற்ற அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றது.

ஆக்கிரமிப்பாளர்களுடன்கைகோர்த்து கொண்டு மாவட்ட நிர்வாகம் பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை அனுமதிப்பதுடன் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் செயல்படுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...