கோவையில் பிரபல கொள்ளையன் கைது - மாநகர காவல் துறை உதவி ஆணையர் சந்தீஸ் தகவல்!

கோவையில் நூதனமாக வீட்டின் பூட்டை உடைத்து திருடும் பிரபல கொள்ளையன் சிவச்சந்திரனை போலீசார் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே கைது செய்து, 57 சவரன் நகை, 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக மாநகர காவல் துறை உதவி ஆணையர் சந்தீஸ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளதாக மாநகர காவல் துறை உதவி ஆணையர் சந்தீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் துறை உதவி ஆணையர் சந்தீஸ் கூறியதாவது, கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவச்சந்திரன்(54). பல்வேறு கொள்ளையில் ஈடுபட்டுள்ள இவர், நள்ளிரவு 2 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை மட்டுமே வீட்டை உடைத்து திருடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

ஒரு வீட்டை மூன்று நாட்கள் வரை கண்காணித்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடமிருந்து 57 சவரன் நகை, 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர பகுதியில் தற்போது கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா செல்லக்கூடிய நபர்கள் வீடு பூட்டி இருந்தால் அது குறித்து அருகில் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தினமும் இரவு நேரங்களில் ஒவ்வொரு பகுதியிலும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...