வால்பாறையில் வழித்தடத்தை மறைத்து நின்ற சுற்றுலா வாகனங்கள் - சாலையை கடக்க முடியாமல் திணறிய யானைகள்!

வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் குடிப்பதற்காக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வருகின்றன. வாகனங்களை வனச்சாலையில் நிறுத்த வேண்டாம் என்று வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் அதைக் கண்டு கொள்ளாமலும் வனவிலங்குகளால் வரும் ஆபத்தை உணராமலும் வனச்சாலையில் வழிநெடுக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.



கோவை: தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்துவருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தமிழக கேரள எல்லை பகுதியான சாலக்குடி செல்லும் வழித்தடத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை காண ஆர்வத்துடன் செல்கின்றனர்.

இந்த நிலையில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்பவர்கள் மலுக்குபாறை சாலக்குடி சாலையில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றனர்.



அப்போது வனப்பகுதியை விட்டு தனது குட்டிகளுடன் வெளியேறிய யானைகள், சாலையை கடக்க முற்பட்டபோது அப்பகுதில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களால் சாலையை கடக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாயின.



நாள்தோறும் யானைகள் வழித்தடத்தில் வாகனங்கள் மறித்து நிறுத்தி வைக்கப்படுவதால், யானைகள் அப்பகுதியைக் கடக்க முடியாமல் அவதிக்குள்ளாவது தொடர்ந்து வருகிறது. சிறிது நேரம் கழித்து வாகன ஓட்டிகள் வாகனத்தை எடுத்து சென்றதால் யானைகள் சாலையை கடந்து சென்றன.

கோடைகாலம் என்பதால் தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் குடிப்பதற்காக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் செல்கின்றன. எனவே, வாகனங்களை வனச்சாலையில் நிறுத்த வேண்டாம் என்று சுற்றுலா பயணிகளிடம் வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் அதைக் கண்டு கொள்ளாமலும் வனவிலங்குகளால் வரும் ஆபத்தை உணராமலும் வனச்சாலையில் வழிநெடுக்க வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.

எனவே, வனச்சாலைகளில் வாகனங்களை சுற்றுலா பயணிகள் நிறுத்தினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...