தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை - கோவை துடியலூரில் ஒருவர் கைது

கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யபப்ட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்று வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமார் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரளா லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்துகொண்டிருந்த துடியலூரைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...