கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் பெரியப்பா கைது!

கோவையில் 10 வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின், அந்த சிறுமியின் பெரியப்பாவை துடியலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி, 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கமாக தனது பெரியப்பா வீட்டிற்கு விடுமுறை நாட்களில் படிக்கச் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் இருந்து 2022 வரை கடந்த 5 ஆண்டுகளாக சிறுமிக்கு பலமுறை, அவரது பெரியப்பா பாலியல் தொல்லையளித்து வந்துள்ளார்.

இது குறித்து வெளியே சொல்ல அச்சப்பட்ட அந்தச் சிறுமி கடந்த சில நாட்களுக்குமுன், தனது தாயிடம் விவரத்தைக் கூறியுள்ளார். அதன்பேரில், தாய் அளித்த புகார் அடிப்படையில், சிறுமியின் பெரியப்பா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...