கோவை தனியார் நிறுவனத் தொழிலாளர் மீது தாக்குதல் - சக தொழிலாளி கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் இருவர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக, ஆறுமுகம் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த திருமூர்த்தி மற்றும் ஆறுமுகம் ஆகியோர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.

கடந்த மாதம், ஆறுமுகம் கையில் இருந்த சுத்தியல் தவறுதலாக திருமூர்த்தியின் கால் மீது விழுந்துள்ளது. இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆறுமுகத்தை திருமூர்த்தி இரும்பு பைப்பால் காலில் தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் வேலைக்கு வந்த ஆறுமுகத்தை, திருமூர்த்தி கால் காயத்தை வைத்து கிண்டல் செய்ததாக தெரிகிறது.

இதில் ,ஆத்திரமடைந்த ஆறுமுகம் அருகில் இருந்த இரும்பு பைப்பால் திருமூர்த்தியில் தலையில் தாக்கியுள்ளார். இதில் திருமூர்த்திக்கு தலையில் தையல்கள் போடப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக திருமூர்த்தியின் தாய் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகத்தை கைது செய்த துடியலூர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

ஆறுமுகத்தின் மீது ஏற்கனவே வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...