கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 12 வேகத்தடைகள் அகற்றம் - மாநகராட்சி ஆணையர் தகவல்!

கோவை மாநகராட்சியில்‌ அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் (Speed Breaker) அகற்றப்பட்டுள்ளன. 346 இடங்களில்‌ வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகளில்‌ வர்ணம்‌ பூசப்பட்டு, பொதுமக்கள்‌ நடக்கும்‌ பகுதிகளில் குறியீடுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ மாநகராட்சி சாலைகளில்‌ அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் (Speed Breaker) இதுவரை அகற்றப்பட்டு உள்ளன.



இதேபோல், மாநகராட்சி சாலைகளில்‌ உள்ள வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகள்‌ 346 இடங்களில்‌ வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகளில்‌ வர்ணம்‌ பூசப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள்‌ நடக்கும்‌ பகுதியை குறிக்கும்‌ வகையில்‌ குறியீடுகள்‌ (Marking) அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைபெறும்‌.

இவ்வாறு, அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...